* குளோப் ஜாமுன் செய்யும் போது உருண்டைகள் உடையாமல் அப்படியே இருப்பதற்கு ஜீரா பாகு சற்று ஆறிய பின்னர் அதில் போட வேண்டும்.* மில்க்மெய்டு சேர்த்து சர்க்கரை பொங்கல் தயாரித்தால் அதன் சுவை மேலும் அதிகரிக்கும்.* அதிகாலை சமையல் செய்பவர்கள் முதல் நாளிலேயே காய்கனிகளை வெட்டி பிரிட்ஜ்ஜில் வைப்பார்கள். வெங்காயத்தை மட்டும் முதல் நாளிலேயே வெட்டி வைப்பதை தவிர்க்கலாம். அப்படி வெட்டி வைக்கவேண்டுமென்றால் நன்றாக மூடி உள்ள பிளாஸ்டிக் பாத்திரங்களில் வைத்து பிரிட்ஜில் வைக்க வேண்டும். இதனால் கெடுதலும் ஏற்படாது. வெங்காய வாடையும் பிரிட்ஜினுள் பரவாது.* எந்த அரிசியாக இருந்தாலும் 15 நிமிடங்களுக்கு குறையாமல் ஊற வைத்து உலையில் வேகவைத்தால் அது வேகும் நேரம் குறையும். எரிபொருள் மிச்சமாகும்.* வாழைப்பூ, வாழைத்தண்டு நறுக்கி தண்ணீரில் போட்டு வைக்கும் போது அவை கருத்து விடாமல் இருப்பதற்காக சிறிது தயிர் ஊற்றி வைக்கலாம்.* விளக்கு போன்ற பித்தளை பாத்திரங்களை புளி சேர்த்து தேய்ப்பதற்கு பதில் எலுமிச்சை சாறை பாத்திரம் தேய்க்கும் பொடியுடன் சேர்த்து தேய்தால் எண்ணெய் பிசுக்கள் மறைந்து பளபளப்பாக மாறிவிடும்.* வீடுகளில் தரை, சமையல் டேபிளில் எலுமிச்சை சாறு கறை இருந்தால் அதனை அகற்ற அதில் சிறிது வெண்ணையை தடவி சில மணி நேரம் கழித்து துடைத்தால் போய்விடும்.* தேங்காய் சட்னி செய்யும் போது புளியை சேர்க்க விரும்பாதவர்கள் அதற்கு பதில் சிறிது தக்காளிப்பழத்தை சேர்த்து தயாரித்தால் வித்யாசமான சுவையுடன் இருக்கும்.* உருளை கிழங்கு வேகவைத்த தண்ணீரை கீழேவிடாமல் அதை உபயோகித்து பாத்திரம் கழுவினால் பாத்திரம் பளிச்சென இருக்கும்….
வீட்டுக் குறிப்புகள்
85
previous post