கெங்கவல்லி, செப்.1: வீரகனூர் சந்தைப்பேட்டை பகுதியை சேர்ந்தவர் அழகுவேல். இவரது வீட்டுக்குள் நேற்று திடீரென பாம்பு புகுந்தது. இதை பார்த்த அவரது குடும்பத்தினர் அலறி அடித்து கொண்டு வெளியே ஓடினர். இது குறித்து அழகுவேல் தீயணைப்பு துறைக்கு தகவல் கொடுத்தார். நிலைய அலுவலர் (பொ) அசோகன் தலைமையில் வந்த தீயணைப்புத்தறை வீரர்கள் விரைந்து சென்று, வீட்டுக்குள் இருந்த 5அடி நீளம் ெகாண்ட நல்ல பாம்பை உயிருடன் மீட்டனர். பின்னர், அந்த பாம்பை கெங்கவல்லி வனசரகர் சிவக்குமாரிடம் ஒப்படைத்தனர். வனத்துறையினர் அந்த பாம்பை வனப்பகுதியில் விடுவித்தனர்.