அலங்காநல்லூர், செப். 5: அலங்காநல்லூர் அருகே வடுகபட்டியை சேர்ந்தவர் ராம்குமார் (32). இவர் மதுரையில் உள்ள தனியார் செல்போன் நிறுவனத்தில் மேனேஜராக பணிபுரிந்து வருகிறார். இவர் சம்பவத்தன்று உடல்நிலை பாதிக்கப்பட்ட மனைவியுடன் தனியார் மருத்துவமனைக்கு சிசிச்சைக்கு சென்றுள்ளார். அங்கு சிகிச்சை முடித்து இரண்டு நாட்களுக்குப் பிறகு வீட்டிற்கு திரும்பி வந்துள்ளார். அப்போது வீட்டின் முன் கதவு உடைக்கப்பட்டு இருந்ததை பார்த்து அதிர்ச்சியடைந்தார். பின்னர் வீட்டிற்குள் சென்று பார்த்தபோது, அங்கிருந்த பீரோவின் கதவுகளும் உடைக்கப்பட்டு உள்ளே வைத்திருந்த 8 பவுன் தங்க நகைகள் திருடு போனது தெரியவந்தது. இதுகுறித்து அவர் அளித்த புகாரின் பேரில் அலங்காநல்லூர் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.