சேலம், செப்.3: சேலம் சூரமங்கலம் ஆசாத் நகரை சேர்ந்தவர் முகமதுயாசீன் (55). இவரது வீட்டின் மொட்டை மாடியில் நேற்றுமுன்தினம் இரவு சந்தேகப்படும்படியாக 2 மர்மநபர்கள் நின்றுக்கொண்டிருந்தனர். இதனை பார்த்த முகமது யாசீன் அப்பகுதி மக்களின் உதவியுடன் அந்த நபர்களை பிடிக்க முயன்றார். அப்போது அவர்களில் ஒருவர் தப்பினார். மற்றொரு நபரை பொதுமக்கள் சுற்றிவளைத்து பிடித்து அங்கேயே கட்டி வைத்தனர். தொடர்ந்து இதுபற்றி சூரமங்கலம் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் விரைந்து வந்த போலீசார் அந்த நபரை மீட்டு காவல்நிலையம் அழைத்து சென்று விசாரித்தனர். அதில், அவர் ஒடிசாவை சேர்ந்த சந்தன் லெங்கா(25) என்பதும், வீட்டில் திருட வந்ததும் தெரியவந்தது. இதையடுத்து அவரை போலீசார் கைது செய்தனர். மேலும் தப்பிய அவரது நண்பரை போலீசார் தேடி வருகின்றனர்.
வீட்டில் திருட வந்தவர் கைது நண்பருக்கு வலை
previous post