திருச்சி, செப்.3: திருச்சியில் வீட்டில் கஞ்சா பதுக்கி வைத்திருந்த வாலிபரை போலீசார் கைது செய்தனர். திருச்சி எடத்தெருவை சேர்ந்தவர் ஜான்பால்(22). இவரது வீட்டில் கஞ்சா பதுக்கி வைத்திருப்பதாக மது விலக்கு அமலாக்கப்பிரிவு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதைத் தொடர்ந்து, கடந்த 1ம் தேதி வீட்டில் போலீசார் அதிரடி சோதனை நடத்தினர். சோதனயைில், 140 கிராம் கஞ்சா பதுக்கி வைத்திருந்தது தெரியவந்தது. தொடர்ந்து, கஞ்சாவை பறிமுதல் செய்து, அவரை கைது செய்தனர்.