நன்றி குங்குமம் டாக்டர்மெடிக்கல் ஷாப்பிங்நாளுக்குநாள் அதிகரித்து வரும் அறிவியல் தொழில்நுட்ப வளர்ச்சியால் தற்போது மருத்துவத் துறையிலும் நவீன; தொழில்நுட்ப சாதனங்களின் பயன்பாடுகள்; அதிகரித்து வருகிறது. நீண்ட காலமாக படுக்கையிலுள்ள நோயாளிகள், அவசர சிகிச்சை தேவைப்படுபவர்கள், முதியவர்கள், உடல்நிலை இயலாதவர்கள்; போன்றோர் அவரவர் வசதிக்கேற்ப; மருத்துவமனையிலோ அல்லது வீட்டில் வைத்தோ நவீன மருத்துவ உபகரணங்களைப் பயன்படுத்தி நோய்களிலிருந்து;; தங்களை பாதுகாத்துக்கொள்ள முடியும். இதுபோன்று வீட்டில் வைத்தும் உபயோகப்படுத்தக்கூடிய மருத்துவ உபகரணங்களைப் பற்றி, சென்னை பிராட்வே ஈவ்னிங்; பஜாரில் இயங்கிவரும் Universe Surgical Equipment Co நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் வினோத்குமாரிடம் கேட்டோம்…Commode chairநோய், காயம் அல்லது இயலாமை காரணமாக கழிப்பறைக்கு செல்ல உதவி தேவைப்படும் நபர்கள் மலம் கழிக்க; பயன்படுத்தக்கூடிய நாற்காலியை Commode; chair என்று சொல்கிறோம். அதில் இந்த வகை நாற்காலி Indian type toilet-களின் மேல் வைத்து அதில் அமர்ந்து கொண்டு மலம் கழிக்க; பயன்படுத்தலாம். இதில் உள்ள குழாயோடு தண்ணீர் குழாயை இணைத்து சுத்தம் செய்து கொள்ளலாம். இதை சாதாரண Bedpan மீது வைத்தும் பயன்படுத்திக் கொள்ளலாம். விலை ரூ.1,800.Commode chair with wheelஇந்த வகை Commode chair with wheel-ஐ மடித்துக்கொள்வதோடு, உயரத்தைக் கூட்டவோ, குறைக்கவோ முடியும். இதன்; உயரத்தை அதிகரித்து; Western type toilet-ன் மீது வைத்தோ அல்லது உயரத்தைக் குறைத்து இதிலுள்ள Pan-ஐ எடுத்துவிட்டு; Indian type toilet-ன் மீது; வைத்தோ அல்லது தேவைப்படும் இடத்தில் நோயாளியின் படுக்கைக்கு அருகில் வைத்தும்; பயன்படுத்தலாம். இந்த வகை நாற்காலி முதியவர்கள், கர்ப்பிணிப்; பெண்கள், பக்கவாதம், மூட்டுவாதம் மற்றும் படுக்கையில் இருக்கும் நோயாளிகளுக்கும் பயனுள்ளதாக இருக்கிறது. நாற்காலியின் விலை ரூ.2,800. 3 in 1 Commode chair இந்த வகை 3 in 1 நாற்காலியை Commode chair ஆகவும், அதை எடுத்துவிட்டு Walker ஆகவும் பயன்படுத்தலாம். இதில்; உட்கார்ந்துகொண்டு; Shower chair ஆக பயன்படுத்தி குளிக்கவும் செய்யலாம். இதன் உயரத்தைக் கூட்டவோ, குறைக்கவோ; செய்யலாம். இந்த வகை நாற்காலியின் விலை; ரூ.3,500. Nebulizer மழை மற்றும் பனி காலங்களில் ஏற்படுகிற நெஞ்சு சளியை நீக்குவதற்கு இந்த Nebulizer கருவி பயன்படுகிறது.; இக்கருவியின் உள்ளே சளியை; நீக்குவதற்கான மருந்தினைப் போட்டு இயக்கும்போது வெளிவரும் புகையை முகர; வேண்டும். அப்புகை அடிவயிறு வரை செல்வதோடு சளியை உருகச் செய்து; வெளியேற்றுகிறது. இக்கருவி குழந்தைகள்; முதல் பெரியவர்கள் வரை அனைவரும் பயன்படுத்தலாம். இக்கருவி சளி பிரச்னையை சரிசெய்து சீரான; சுவாசத்திற்கு; உதவியாக இருக்கிறது. இக்கருவியின் விலை ரூ.1,450.Digital B.P. Machine இந்த Digital B.P. Machine நாம் வீட்டில் வைத்தே எளிதாக ரத்த அழுத்தத்தைக் கண்டறிய பயன்படுகிறது. எளிதாக; இதிலுள்ள பட்டன்களை இயக்கி,; அதன் திரையில் ரத்த அழுத்த அளவுகளை பார்த்து தெரிந்து கொள்ளலாம். இக்கருவியின் விலை ரூ.1,400. Body Massager கை, கால் மற்றும் மூட்டுவலி, முதுகுவலி, சதைப்பிடிப்பு போன்ற பிரச்னை உடையவர்கள் வீட்டில் வைத்து; பயன்படுத்தக்கூடிய உபகரணம்தான் இந்த Body; Massager. இதன் விலை ரூ.1,800. Infrared lamp உடலில் வலியுள்ள இடங்களில் வலிநீக்கும் எண்ணெய்களைத் தடவி அதன் மீது அகச்சிவப்பு கதிர்களை செலுத்தி; சிகிச்சை அளிப்பார்கள். இந்த அகச்சிவப்பு; கதிர்களை உமிழக்கூடிய கருவிதான் இந்த Infrared lamp. இதன் விலை ரூ.2,500. Suction apparatus உடலிலுள்ள சளியை வெளியேற்ற பயன்படுத்தும் இந்த கருவிக்கு Suction apparatus என்று பெயர். Tracheostomy அறுவை; சிகிச்சை செய்து; கழுத்தில் குழாய் பொருத்தப்பட்டு இருப்பவர்களால் எச்சில்கூட துப்ப இயலாது. இதுபோன்ற நபர்களுக்கு இந்தக் கருவியைப் பயன்படுத்தி சளியை; வெளியேற்றலாம். இதை மருத்துவமனையிலும், வீட்டிலும் பயன்படுத்தலாம். இதன் விலை ரூ.5,500. Hospital Bed, Air Bed மருத்துவமனையில் நோயாளிகளுக்கு பயன்படுத்துகிற படுக்கைதான் இந்த Hospital Bed. இதை நோயாளியின்; வசதிக்கேற்ப முதுகு பகுதி வரை; மட்டுமோ அல்லது கால் பகுதியை மட்டுமோ உயர்த்திக் கொள்ளலாம். இந்தப் படுக்கையின் உயரத்தைத் தேவைக்கேற்ப கூட்டவோ, குறைக்கவோ முடியும்.; இந்தப் படுக்கையின் மீது மெத்தையும் அதன் மீது Air Bed-ம்; இருக்கும். இந்த படுக்கை Manual, Motorized என்று 2 வகையில் உள்ளது.; நோயாளியின் வசதிக்காக இந்தப் படுக்கையை வாடகைக்கும் கொடுக்கிறோம். இந்த Hospital bed-ன் விலை ரூ.12,500. இதன்மீது பயன்படுத்தும் Air; bed-ன் விலை ரூ.5,500. Backrest support சாய்ந்த நிலையில் உட்காருவதற்கு உதவுகிறது இந்த Backrest support. இதை தேவைக்கேற்ப மேலே அல்லது கீழே நகர்த்திக் கொள்ளலாம். இது; படுக்கையில் இருப்பவர்களும், முடியாமல் இருப்பவர்களும் ஒரே நிலையில் இருக்காமல்; தேவைக்கேற்ப மாற்றி சாய்ந்து உட்கார்ந்துகொள்ள உதவியாக; இருக்கிறது. இதன் விலை ரூ.1,600. Knee capகால் மூட்டில் வலி இருப்பவர்கள் பயன்படுத்தக்கூடியது இந்த Knee cap. விளையாட்டுப் பயிற்சிகளின்போது ஏற்படுகிற; மூட்டுவலிக்கும் இது; பயன்படுகிறது. நடுத்தர வயதினர் மற்றும் முதியவர்களுக்கு இது மிகவும் உதவியாக இருக்கிறது. இதன் விலை ரூ.200. Hearing Aids சிலருக்கு சரியாக காது கேட்காது. Low frequency பிரச்னை இருப்பவர்களுக்கு அதை அதிகப்படுத்திக் கொடுத்து சரிசெய்ய; உதவுகிறது இந்த Hearing; aids. இது மிகவும் சிறியது, விலையும் குறைவு, இதனால் பக்கவிளைவுகள் எதுவும் ஏற்படாது. இதன் விலை ரூ.1,500. Lumbo Sacral Belt (LS Belt) இடுப்பு வலி உடையவர்கள் பயன்படுத்தக்கூடியது இந்த Lumbo sacral belt. இடுப்பு முதுகெலும்பில் L1, L2, L3, L4, L5 என்று 5 பிரிவுகள்; உள்ளது. இதில் ஏற்படக்கூடிய வலிகளைக் கட்டுப்படுத்த இந்த பெல்ட் உதவியாக இருக்கிறது. இதன் விலை ரூ.450.– க.கதிரவன்படங்கள் : ஆ.வின்சென்ட் பால்
வீட்டில் இருக்க வேண்டிய மருத்துவ உபகரணங்கள்
previous post