கிருஷ்ணகிரி, ஆக.27: கிருஷ்ணகிரி புதிய வீட்டுவசதி வாரிய குடியிருப்பு சத்யசாய் நகர் பகுதியை சேர்ந்தவர் பாலகிருஷ்ணன். இவரது மனைவி ராஜேஸ்வரி. இவர்கள் கடந்த 16ம் தேதி, வீட்டை பூட்டி விட்டு திருநெல்வேலி சென்றிருந்தனர். பின்னர் மீண்டும் நேற்று முன்தினம் திரும்பியபோது, வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு திறந்து கிடந்தது. உள்ளே சென்று பார்த்தபோது அங்கிருந்த பீரோவை உடைத்து அதிலிருந்த ஆறரை பவுன் நகைகளை மர்மநபர்கள் திருடிச்சென்றிருப்பது தெரிந்தது. இதுகுறித்து அளித்த புகாரின் பேரில், தாலுகா போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், அப்பகுதியில் சிசிடிவி கேமராக்கள் எதுவும் பொருத்தப்பட்டுள்ளதா என ஆய்வு செய்து வருகின்றனர்.
வீட்டின் பூட்டை உடைத்து 6 பவுன் திருட்டு
previous post