நாமக்கல், அக்.20: நாமக்கல்லில் வீட்டின் பூட்டை உடைத்து 6 பவுன் நகை திருடிய நபரை போலீசார் தேடி வருகின்றனர். நாமக்கல்-திருச்சி ரோடு பொன்விழா நகரை சேர்ந்தவர் சுப்பிரமணியம் (43). இவர் சிறுதானிய கடை வைத்துள்ளார். நேற்று முன்தினம் இரவு, வீட்டை பூட்டி விட்டு குடும்பத்தினருடன், காந்திபுரத்தில் உள்ள உறவினர் வீட்டிற்கு சென்றார். நேற்று காலை மீண்டும் வீடு திரும்பியபோது, வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். உள்ளே சென்று பார்த்தபோது பீரோவில் இருந்த 6 பவுன் நகைகள் மற்றும் ₹10 ஆயிரம் திருடு போய் இருப்பது தெரியவந்தது. இதையடுத்து சுப்பிரமணியம் நாமக்கல் போலீசில் புகார் அளித்தார். அதன் பேரில், போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தி, திருடர்களை தேடி வருகின்றனர்.