சேலம், ஆக.29: சேலம் அரியானூர் எதன்காடு பகுதியை சேர்ந்தவர் அருண்குமார். இவரது மனைவி வனிதா (42). இருவரும் லண்டனில் மகளுடன் வசித்து வருகின்றனர். இவர்கள் 6 மாதத்திற்கு ஒரு முறை, சேலத்தில் உள்ள வீட்டுக்கு வந்து செல்வது வழக்கம். இவர்களது வீட்டை பெற்றோர் கவனித்து வந்தனர். அவர்கள் நேற்று காலை அரியானூரில் உள்ள வீட்டுக்கு அருண்குமார் வந்தபோது, அங்கு வீட்டின் பின்பக்க கதவு உடைக்கப்பட்டு கிடந்தது. வீட்டிற்குள் சென்று பார்த்தபோது பொருட்கள், துணிகள் சிதறி கிடந்தன. ஆனால் எதுவும் திருடுபோகாதது தெரிந்தது. இதுபற்றிய தகவலின் பேரில் வந்த ஆட்டையாம்பட்டி போலீசார், அங்கு பதிவாகியிருந்த கைரேகைகளை பதிவு செய்தனர். வீட்டிற்குள் இரவு நேரத்தில் புகுந்த மர்மநபர்கள், அங்கு நகை, பணம் எதுவும் கிடைக்காததால் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றது விசாரணையில் தெரியவந்தது. தொடர்ந்து திருடும் முயற்சியில் ஈடுபட்ட நபர்கள் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
வீட்டின் பூட்டை உடைத்து திருட முயன்ற மர்ம நபர்
previous post