சூலூர், ஜூலை 3: வீடு வீடாக சென்று சாதனைகளை பொதுமக்களிடம் கூறுங்கள். வெற்றி உறுதியாக கிடைக்கும் என சூலூரில் தெற்கு மாவட்ட திமுக சார்பில் ஓரணியில் தமிழ்நாடு பொதுக்கூட்டத்தில் மாவட்ட திமுக செயலாளர் தளபதி முருகேசன் குறிப்பிட்டார். சூலூரில், கோவை தெற்கு மாவட்ட திமுக, சூலூர் தெற்கு ஒன்றிய திமுக சார்பில் ஓரணியில் தமிழ்நாடு பொதுக்கூட்டம் சூலூரில் நடைபெற்றது. மாவட்ட திமுக செயலாளர் தளபதி முருகேசன் தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் தலைமைக்கழக பேச்சாளர் சிங்கை சௌந்தர்ராஜன் சிறப்புரையாற்றினார்.
கூட்டத்தில் மாவட்ட செயலாளர் தளபதி முருகேசன் பேசுகையில்,‘‘தமிழக முதல்வரின் மண், மொழி, மானம் `ஓரணியில் தமிழ்நாடு’ என்ற ஆணைப்படி திமுகவினர் ஒவ்வொருவரும் ஆட்சியின் பெருமையை, வழங்கி வரும் நலத்திட்டங்களை வீடு வீடாகச்சென்று வாக்காளர்களிடம் கொண்டு சேர்க்க வேண்டும்’’ என்றார். இந்த கூட்டத்தில் ஒன்றிய செயலாளர்கள் மன்னவன், சிபி செந்தில்குமார், பொதுக்குழு உறுப்பினர் ரகு துரைராஜ், கருமத்தம்பட்டி நகராட்சி தலைவர் நித்யா மனோகரன், நகரச் செயலாளர் கவுதமன், பேரூராட்சி தலைவர்கள் தேவிமன்னவன், புஷ்பலதா, ராஜகோபால், இலக்கிய அணி பட்டணம் செல்வகுமார், மாணவரணி பிரபு, சுற்றுச்சூழல் அணி பசுமை நிழல் விஜயகுமார், பேரூராட்சி துணைத்தலைவர் சோலை கணேசு, சூலூர் ஜெகநாதன், பீடம்பள்ளி சுரேஷ் மற்றும் நகர, பேரூர், கிளைக்கழக நிர்வாகிகள், மகளிரணி மற்றும் அனைத்து சார்பு அணி் நிர்வாகிகள், பொதுமக்கள் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.