திருப்பூர், ஆக. 7: திருப்பூர் மாவட்டம் பொங்கலூர் அருகே உள்ள கே.ஆண்டிபாளையம் லட்சுமி நகரை சேர்ந்தவர் பிரேஸ் (40). இவரது மனைவி தேவி. இருவரும் திருப்பூர் பலவஞ்சிபாளையத்தில் அழகு நிலையம் நடத்தி வருகின்றனர். இந்நிலையில், பிரேஸ் மனைவியுடன் திருப்பூர் சென்றுவிட்டு மீண்டும் இரவு வீட்டுக்கு திரும்பி உள்ளார். அப்போது, வீட்டின் கதவு பூட்டு உடைக்கப்பட்டு உள்ளே இருந்த பொருட்கள் சிதறி கிடந்ததைக்கண்டு இருவரும் அதிர்ச்சி அடைந்தனர். மேலும், வீட்டில் வைக்கப்பட்டிருந்த தங்க மோதிரம், கம்மல் உட்பட 18 கிராம் நகை திருட்டு போனது தெரிய வந்தது. இதுகுறித்து, அவிநாசிபாளையம் போலீசில் பிரேஸ் புகார் அளித்தார். புகாரின்பேரில், போலீசார் வழக்குப்பதிவு செய்து திருட்டில் ஈடுபட்ட மர்ம நபர்கள் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
வீடு புகுந்து நகை திருட்டு
previous post