நெல்லை: உவரி இளையன்குடி சாலை குட்டத்தைச் சேர்ந்தவர் சஞ்சீவி (48). சென்னையில் வசித்து வரும் இவர், தனது தாய்க்கு ஏற்பட்ட உடல்நிலை பாதிப்பை அடுத்து சொந்த ஊருக்கு வந்தார். கடந்த மே 31ம் தேதி வீட்டை பூட்டிவிட்டு தனது தாயுடன் வெளியே சென்ற சஞ்சீவி, மாலை வீடு திரும்பியபோது கதவு உடைந்திருப்பது கண்டு பதறினார். உள்ளே சென்றபோது அங்கு வைக்கப்பட்டிருந்த எல்இடி டிவியை மர்ம நபர் திருடிச் சென்றது தெரியவந்தது. பின்னர் இதுகுறித்து அவர் அளித்த புகாரின் பேரில் வழக்குப் பதிந்த உவரி போலீசார் மர்மநபரைத் தேடி வருகின்றனர்.