கிருஷ்ணகிரி, ஜூன் 20: கிருஷ்ணகிரி மாவட்டம், ராயக்கோட்டை குட்டூர் கிராமத்தைச் சேர்ந்தவர் சந்திரசேகர். இவரது மனைவி சரண்யா(29). இவருக்கும், அதே பகுதியைச் சேர்ந்த சூர்யபிரகாஷ்(29) என்பவருக்கும் இடையே தகாத உறவு உள்ளது. இவர்கள் இருவரும் அடிக்கடி தனிமையில் சந்தித்து வந்தனர். இந்நிலையில், நேற்று முன்தினம், சரண்யாவின் வீட்டுக்குள் அத்துமீறி நுழைந்த சூர்யபிரகாஷ், உறவுக்கு அழைத்துள்ளார். ஆனால், அவர் மறுத்துள்ளார். இதுதொடர்பாக அவர்களுக்கிடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதில், ஆத்திரமடைந்த சூர்யபிரகாஷ், சரண்யாவை சரமாரியாக தாக்கி கொலை மிரட்டல் விடுத்துச் சென்றார். இதுகுறித்து சரண்யா அளித்த புகாரின் பேரில், ராயக்கோட்டை போலீசார் சூர்யபிரகாஷ் மீது வழக்குப்பதிந்து, தலைமறைவாக உள்ள அவரை தேடி வருகின்றனர்.
வீடு புகுந்து காதலிக்கு அடி, உதை; வாலிபருக்கு வலை
0
previous post