Friday, February 23, 2024
Home » வீடு தேடி வரும் முதியோருக்கான உணவு!

வீடு தேடி வரும் முதியோருக்கான உணவு!

by kannappan

நன்றி குங்குமம் டாக்டர்சபாஷ்Food delivery App இன்று பிரபலமாக இருப்பது பலரும் அறிந்ததே. ஒரே ஒரு மொபைல் ஆப் மட்டும் டவுன் லோட் செய்துகொண்டால், எந்த உணவகத்திலிருந்து என்ன உணவு கேட்கிறோமோ அந்த உணவு நாம் இருக்கும் இடம் தேடி வந்துவிடுகிறது. இதை 10 ஆண்டுகளுக்கு முன்பிருந்தே வேறுவிதமாக செய்துகொண்டிருக்கிறார் முதியோர் நல மருத்துவரான நடராஜன். முதியவர்களின் உடல்நிலை, மருத்துவ சிகிச்சை, செரிமானத்திறன், விருப்பத்துக்கேற்ற உணவுகளை குறைந்த கட்டணம் பெற்று டெலிவரி செய்து வந்திருப்பவரிடம் பேசினோம்…‘‘முதுமைப் பருவத்தினருக்கான இன்றியமையாத தேவைகளில், மருத்துவ சிகிச்சைக்கு என்றைக்கும் முதலிடம் உண்டு என்பதை யாரும் மறுத்துவிட முடியாது. அத்தலைய சிறப்பு வாய்ந்த மருத்துவத்தில், 40 வருடங்களாகப் பணியாற்றிய அனுபவம் இருக்கிறது. அந்த அனுபவங்களின் அடிப்படையில், வயோதிக காலத்தில் அத்தியாவசியத் தேவைகளான மருத்துவம், உணவு இன்றி தவிக்கும் மூத்த குடிமக்களுக்கு இவை தடையின்றி கிடைக்க ஏதாவது செய்ய வேண்டுமென முடிவு செய்தேன். எனவே, முதலில் முதுமைப்பருவத்தினரின் உடல் ஆரோக்கியம் எதனால் கெட்டுப் போகிறது? என்பதை முதலில் ஆய்வு செய்து கண்டறிந்தோம். அந்த ஆய்வின் முடிவில், சரிவிகித உணவு, முறையான மருத்துவ சிகிச்சை கிடைக்காமல் போவதுதான் காரணம் என்பது தெரிய வந்தது. இதற்கு ஒரு முடிவு கிடைக்க வேண்டும்; அதற்கு நம்மால் முடிந்த ஏதாவது செய்ய வேண்டுமென நினைத்தேன். ஆகவே, 2008-ம் ஆண்டு என்னுடன் பணியாற்றும் சக மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் தன்னார்வலர்கள் பலரை ஒன்றாக இணைத்து வீடுகளுக்கே சென்று முதியவர்களுக்குத் தேவைப்படும் சிகிச்சைகளைக் கொடுக்க ஆரம்பித்தோம்.இந்தப் பணியில் 35 செவிலியர்கள் உட்பட பல மருத்துவர்களும் பணியாற்றினர். எங்களுடைய இந்த முயற்சிக்குப் பொதுமக்களிடம் நல்ல வரவேற்பு கிடைத்தது. எனவே, இந்த திட்டத்தை அடுத்த கட்டத்துக்குக் கொண்டு போக முடிவு செய்தேன். அதன்படி, கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் முதல் ‘டாக்டர் வி.எஸ்.நடராஜன் முதியோர் நல அறக்கட்டளை’ என்ற அமைப்பைத் தொடங்கி நடத்தி வருகிறேன். இந்த அமைப்பின் துணை நிறுவனர் மற்றும் மேனேஜிங் ட்ரஸ்டி பொறுப்பை ராஜசேகரன் மணிமாறன் என்பவர் ஏற்று செயலாற்றி வருகிறார். இந்த அறக்கட்டளை மூலமாக, சென்னை உட்பட சுற்றுவட்டார பகுதிகளான செங்கல்பட்டு, காஞ்சிபுரம், மேல்மருவத்தூர் போன்ற இடங்களில் மருத்துவ முகாம்கள் தொடர்ந்து நடத்தி வருகிறோம். இந்தப் 10 ஆண்டுகளில் ஏறக்குறைய 8 ஆயிரம் முதியவர்களுக்கு எமர்ஜென்சி சிகிச்சை தந்து விலைமதிப்பில்லாத அவர்களின் உயிரைக் காப்பாற்றி உள்ளோம். ஓய்வூதியம் வாங்கும் முதியவர்களுக்கு லைஃப் சர்ட்டிஃபிகேட் வாங்கித் தந்தும் உதவுகிறோம். தேவைப்படும் வயதானவர்களுக்கு உடல் குறைபாடு சான்றிதழ் கிடைக்க வழி செய்து தருகிறோம். முதுமைப்பருவத்தில் நோய் எதிர்ப்பு சக்தி தானாகவே குறையத் தொடங்கும். எனவே, நிமோனியா காய்ச்சல், டெங்கு, பன்றிக்காய்ச்சல் போன்ற ஆபத்தான நோய்களில் இருந்து வயோதிகர்களைப் பாதுகாக்க தடுப்பூசி மையம் நடத்தி வருகிறோம். இந்த சமூகப்பணியில், தற்போது 64 பேராக தன்னார்வலர்கள் அதிகரித்துள்ளனர்.மாறி வரும் வாழ்க்கைமுறைகளால், கூட்டுக்குடும்பம் என்பது சிதைந்துவிட்டது. அபார்ட்மென்டில் வயதான கணவன் மனைவி மட்டும் தனியாக வாழ வேண்டிய சூழல் உள்ளது. உடல்நலம் குன்றும் இந்தக் காலக்கட்டத்தில் கீரை வகைகள், சிறு தானியங்கள் போன்ற சத்தான உணவு வகைகள் மிதமான உப்பு மற்றும் காரத்துடன் இவர்களுக்குத் தேவைப்படுகிறது. எனவே, ‘Meals On Wheels’ என்ற எங்கள் திட்டத்தை இன்னும் சிறப்பாக செயல்படுத்த ஆலோசித்து வருகிறோம்’’ என்கிறார்.அற்புத பலன் தரும் சர்வ ரோக நிவாரணி‘‘நவீன வாழ்க்கையில்தான் எத்தனை எத்தனை பிரச்னைகள்… இவை எல்லாவற்றுக்கும் தீர்வு தரும் அருமருந்தாக Veuttrah மூலிகை மருந்து செயல்படுகிறது’’ என்கிறார்கள் அகத்தியர் பிரணவ பீடத்தின் நிபுணர்கள். ‘‘உலகம் முழுவதும் உள்ள அனைத்து இயற்கை மருத்துவ விஞ்ஞானிகளால் நீண்ட ஆய்வுக்குப்பின் கண்டுபிடிக்கப்பட்ட அரிய வகை பொக்கிஷம் இது. உயிர் அணுக்கள் இல்லாமையினாலோ, விந்தின் நீந்தும் தன்மை குறைவாக இருப்பதாலோ, விந்து நீர்த்த நிலையிலோ, பெண்களின் கர்ப்பப்பை நீர்கட்டிகளாலோ, மற்ற குறைபாடுகளாலோ குழந்தை இல்லையெனும் கவலை இனி தேவையில்லை.உடலெங்கும் நரம்பு மண்டலங்களில் உள்ள கொழுப்பு படிமத்தை முழுமையாக வெளியேற்றி நரம்பு மண்டலத்தை வலுப்படுத்தி ரத்தத்திற்கு தேவையான அனைத்து சத்துக்களையும் இம்மூலிகை மருந்து அளிக்கிறது. இதயம், நுரையீரல், கல்லீரல், கணையம் சிறுநீர்ப்பை போன்ற உறுப்புகளை பாதுகாக்கவும் உடலில் உள்ள தேவையற்ற கொழுப்புகளை குறைப்பதற்கும் ஏற்றது.மேலும் நோய் எதிர்ப்பு சக்தியை தரக்கூடியது, சர்க்கரை நோய் வராமல் தடுக்கிறது. உடல் பருமன் மற்றும் தொப்பை குறைய பெரிதும் துணை புரிகிறது’’ என்கிறார்கள். – ஜி.ஸ்ரீவித்யா- விஜயகுமார்

You may also like

Leave a Comment

3 × five =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2023 – Designed and Developed by Sortd.Mobi