கோவை. ஆக. 19: கோவை போத்தனூர் மகாலிங்கபுரம் விநாயகர் கோயில் தெருவை சேர்ந்தவர் பங்கஜம் (62). இவர் அப்பகுதியில் இ சேவை மையம் நடத்தி வருகிறார். இதனை இவரது மகன் கவனித்து வருகிறார். இரவு மையத்தை பூட்டிவிட்டு சென்று விட்டனர். நேற்று முன்தினம் காலை ஊழியர் பிரதாப் என்பவர் இ சேவை மையத்தை திறக்க சென்றார். அப்போது ஷட்டர் பூட்டு உடைக்கப்பட்டிருந்தது. கம்ப்யூட்டர்,உதிரிபாகங்கள் மற்றும் 15 ஆயிரம் ரூபாய் திருடப்பட்டிருந்து. இது குறித்து போத்தனூர் போலீசில் புகார் தரப்பட்டது. போலீசார் வழக்குப்பதிவு செய்து திருட்டில் ஈடுபட்ட நபரை தேடி வருகிறார்கள்.
கோவை ஆர்.எஸ்.புரம் லாலி ரோடு பகுதியை சேர்ந்தவர் அனிதா (34) என்பவர் தனது வீட்டில் இரவு நேரத்தில் கதவை பூட்டாமல் வீட்டிற்குள் தூங்கிக் கொண்டிருந்தார். அப்போது அவரது வீட்டிற்குள் நைசாக நுழைந்த மர்ம நபர் செல்போன் மற்றும் வீட்டு முன்பு நிறுத்திய மொபட் ஆகியவற்றை திருடிச்சென்றுவிட்டார். அனிதா இந்த சம்பவம் குறித்து ஆர்.எஸ்.புரம் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் பக்கத்து வீட்டில் உள்ள கண்காணிப்பு கேமரா பதிவுகளை ஆய்வு செய்து விசாரித்து வருகின்றனர்.