Saturday, February 24, 2024
Home » வீடுபுகுந்து 3 பவுன் நகை திருடிய வாலிபர் கைது

வீடுபுகுந்து 3 பவுன் நகை திருடிய வாலிபர் கைது

by Karthik Yash

கடத்தூர், ஜன. 3: கடத்தூர் அருகே பட்டப்பகலில் லாரி டிரைவரின் வீட்டு பூட்டை உடைத்து நுழைந்த மர்மநபர், 3 பவுன் நகையை திருடிச்சென்றார். இதுகுறித்து விசாரணை நடத்திய போலீசார், திருட்டில் ஈடுபட்ட வாலிபரை கைது செய்துள்ளனர்.தர்மபுரி மாவட்டம் கடத்தூர் அடுத்த தின்டலானூர் கிராமத்தை சேர்ந்த பெருமாள்(48). லாரி டிரைவர். இவர் நேற்று காலை வழக்கம்போல் லாரிக்கு சென்றுவிட்டார். இவரது மனைவி வன்னியகொடி, கடத்தூர் அடுத்த அய்யம்பட்டியில் உள்ள தனது தாயார் வீட்டுக்கு சென்றுவிட்டார். மாலை வன்னியகொடி வீட்டுக்கு வந்தபோது, வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு கதவு திறந்து கிடந்தது கண்டு அதிர்ச்சியடைந்தார்.உள்ளே சென்று பார்த்தபோது பீரோவில் வைத்திருந்த மூன்றே கால் பவுன் நகை திருடு போயிருந்தது. இதுகுறித்து பெருமாள், கடத்தூர் போலீசில் புகார் தெரிவித்தார். சம்பவ இடத்துக்கு வந்து விசாரணை நடத்திய போலீசார், நகை திருட்டில் ஈடுபட்ட சில்லாரஅள்ளி கிராமத்தை சேர்ந்த விஜய்(26) என்பவரை கைது செய்தனர். தெடர்ந்து அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

You may also like

Leave a Comment

three × 5 =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2023 – Designed and Developed by Sortd.Mobi