விக்–கி–ர–வாண்டி, மே 17: விஷ சாரா–யம் குடித்து உடல்–நிலை பாதிக்–கப்–பட்டு, முண்–டி–யம்–பாக்–கம் மருத்–து–வ–ம–னை–யில் சிகிச்சை பெறு–ப–வர்–களை எதிர்க்–கட்சி தலை–வர் எடப்–பாடி பழ–னிச்–சாமி சந்–தித்து ஆறு–தல் கூறி–னார். விழுப்–பு–ரம் மாவட்–டம் மரக்–கா–ணம் அடுத்த எக்–கி–யர்–குப்–பத்–தில் விஷ சாரா–யம் குடித்–த–தால் உடல்–நிலை பாதிக்–கப்–பட்டு, இது–வரை 13 பேர் உயி–ரி–ழந்–துள்–ள–னர். மேலும் 44 பேர் உடல்–நிலை பாதிக்–கப்–பட்டு, விழுப்–பு–ரம் முண்–டி–யம்–பாக்–கம் அரசு மருத்–துவ கல்–லூரி மருத்–து–வ–ம–னை–யில் சிகிச்சை பெற்று வரு–கின்–ற–னர். இவர்–களை அர–சி–யல் கட்சி தலை–வர்–கள் சந்–தித்து ஆறு–தல் கூறி வரு–கின்–ற–னர். இந்–நி–லை–யில், நேற்று காலை தமிழ்–நாடு எதிர்க்–கட்சி தலை–வர் எடப்–பாடி பழ–னிச்–சாமி நேரில் சந்–தித்து, ஆறு–தல் கூறி பாதிக்–கப்–பட்–ட–வர்–களுக்கு அளிக்–கப்–ப–டும் சிகிச்சை முறை குறித்து கேட்–ட–றிந்–தார். மேலும், அவர்–க–ளது உடல்–நிலை குறித்து மருத்–து–வர்–க–ளி–டம் கேட்டு, தேவை–யான உயர்–தர சிகிச்சை அளிக்க வேண்–டும், என தெரி–வித்–தார்.அப்–போது சி.வி.சண்–மு–கம் எம்பி, முன்–னாள் அமைச்–சர் விஜ–ய–பாஸ்–கர், எம்–எல்–ஏக்–கள் அருண்–மொ–ழித்–தே–வன், சக்–க–ர–பாணி ஆகி–யோர் உட–னி–ருந்–த–னர்.