கிருஷ்ணகிரி, நவ.23: காவேரிப்பட்டணம் அருகேயுள்ள கால்வேஅள்ளி பகுதியை சேர்ந்தவர் கோவிந்தன். இவரது மகன் சுதாகர்(16), அதே பகுதியில் உள்ள அரசு பள்ளியில் 9ம் வகுப்பு படித்து வந்தான். கடந்த 3ம் தேதி இரவு, சுதாகர் படிக்காமல் செல்போனில் விளையாடி கொண்டிருந்தான். இதனை பெற்றோர் கண்டித்தனர். இதனால் மனவேதனையடைந்த சுதாகர், விஷத்தை குடித்து விட்டு மயங்கினான். இதை கண்டு அதிர்ச்சியடைந்த பெற்றோர், உடனடியாக அவனை மீட்டு பெங்களூருவில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி, நேற்று முன்தினம் உயிரிழந்தான். இதுபற்றி காவேரிப்பட்டணம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
விஷம் குடித்த மாணவன் சிகிச்சை பலனின்றி சாவு
0
previous post