பண்ருட்டி, ஆக. 22: பண்ருட்டியை அடுத்த காடாம்புலியூர் கீழிருப்பு வடக்கு தெருவை சேர்ந்தவர் பாண்டியன்(21). இவர் சென்னை தனியார் கம்பெனியில் ஊழியராக வேலை செய்து வந்தார். கோயில் திருவிழாவிற்காக ஊருக்கு வந்த பாண்டியன், தனது தாயிடம் தனக்கு அந்த வேலை பிடிக்கவில்லை என்று கூறியுள்ளார். வேறு வேலை கிடைக்காத நிலையில் மன உளைச்சலில் இருந்து வந்த பாண்டியன் கடந்த 6ம் தேதி வீட்டில் விஷம் குடித்து மயங்கி கிடந்தார். இதை பார்த்த அருகில் இருந்தவர்கள் ஆபத்தான நிலையில் அவரை மீட்டு சிகிச்சைக்காக பண்ருட்டி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். பின்னர், அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக புதுவை தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டவர், அங்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இது குறித்த புகாரின்பேரில், காடாம்புலியூர் இன்ஸ்பெக்டர் பலராமன், சப்-இன்ஸ்பெக்டர் பிரேம்குமார் மற்றும் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
விஷம் குடித்து வாலிபர் சாவு
previous post