சிவகாசி, ஜூன் 20: சிவகாசி அருகே தாழிகுளத்துப்பட்டியை சேர்ந்தவர் முனியம்மாள்(65). கணவர் சமுத்திரக்கனி இறந்ததை தொடர்ந்து மூதாட்டி முனியம்மாள் தனது மகள்கள் வீட்டில் வசித்து வந்துள்ளார். கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு தவறி விழுந்ததில் தண்டுவடத்தில் காயம் ஏற்பட்டு பல்வேறு இடங்களில் மருத்துவம் பார்த்தும் வலி தீரவில்லை என்று கூறப்படுகிறது. சம்பவத்தன்று அதிகாலை 5 மணிக்கு முனியம்மாள் வீட்டில் இருந்த விஷத்தை குடித்து தற்கொலைக்கு முயன்றுள்ளார். இதில் மயக்கம் அடைந்த முனியம்மாள், விருதுநகர் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார். இந்த சம்பவம் குறித்து எம்.புதுப்பட்டி போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.