ஈரோடு, ஆக.4: கோவை மாவட்டம் இக்கரை பூலவப்பட்டியை சேர்ந்தவர் வேல்முருகன் (48). கூலி தொழிலாளி. திருமணம் ஆனவர். இவர், ஈரோடு மாவட்டம் கொங்கர்பாளையம் எருமைக்காரன் தோட்டத்தை சேர்ந்த மருதாச்சலம் என்பவர் மனைவியான ராதாமணி (45) என்பவருடன் கடந்த 10 ஆண்டுகளாக குடும்பம் நடத்தி வந்தார். வேல்முருகன் மதுப்பழக்கம் இருப்பதால் கடந்த 6 மாதமாக சரிவர வேலைக்கு செல்லாமல் இருந்து வந்தார்.
இந்நிலையில், கடந்த 31ம் தேதி வாழ்க்கையில் விரக்தியடைந்த வேல்முருகன் விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றார். இதையறிந்த ராதாமணி வேல்முருகனை மீட்டு சிகிச்சைக்காக கோபி அரசு மருத்துவமனையில் அனுமதித்தார். பின்னர், மேல் சிகிச்சைக்காக பெருந்துறையில் உள்ள ஈரோடு அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். ஆனால், அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் உயிரிழந்தரார். இது குறித்து ராதாமணி பங்களாபுதூர் போலீஸ் ஸ்டேஷனில் அளித்த புகாரின் பேரில், போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.