திருச்செங்கோடு, மே 27: ரஷ்யாவின் 108 ஆண்டுகள் பழமையான கிரிமியன் ஃபெடரல் பல்கலைக்கழகத்துடன், திருச்செங்கோடு விவேகானந்தா கல்வி நிறுவனங்கள் புரிந்துணர்வு ஒப்பந்ததில் கையெழுத்திட்டுள்ளது.
ரஷ்யாவின் கிரிமியன் ஃபெடரல் பல்கலைக்கழகத்துடன், இந்தியாவில் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்த முதல் நிறுவனம் என்ற பெருமையை விவேகானந்தா கல்வி நிறுவனங்கள் பெற்றுள்ளது. கிரிமியன் ஃபெடரல் பல்கலைக்கழகத்தின் சார்பில் டாக்டர் கெவோர்க் கேப்ரியலியன், சர்வதேச விவகாரத் தலைவர் க்ருட்டிகோவ், கணினி அறிவியலில் மூத்த டாக்டர் எவ்ஜெனி கல்வியாளர் அலெக்சாண்டர் நுட்கா, பொறியியல் இயக்குநர் ஆகியோர் கலந்து கொண்டனர்.
விவேகானந்தா கல்வி நிறுவனங்கள் தலைவர் டாக்டர் கருணாநிதி ஒப்பந்தம் குறித்து எடுத்துரைத்தார். விவேகானந்தா கல்வி நிறுவனங்களின் இணை நிர்வாக இயக்குநர் டாக்டர் அர்த்தநாரீவரன் கையெழுத்திட்டார். இதில் துணைத்தலைவர் டாக்டர் கிருபாநிதி, இணை செயலாளர் டாக்டர் ஸ்ரீராகநிதி, நிர்வாக இயக்குனர் டாக்டர் குப்புசாமி, ஆராய்ச்சி இயக்குனர் டாக்டர் பாலகுருநாதன், மருத்துவ இயக்குனர் டாக்டர் பிரகாசம், திறன் மேம்பாட்ட இயக்குநர் டாக்டர் குமாரவேல் ஆகியோர் கலந்து கொண்டனர். …