தர்மபுரி, ஆக. 21: அரூர் அருகே உள்ள சந்திராபுரம் பகுதியை சேர்ந்தவர் பழனிச்சாமி (36), விவசாயி. இவர் நேற்று முன்தினம் தனது தோட்டத்திற்கு சென்று விட்டு, பின்னர் அங்கிருந்து வீட்டுக்கு வந்தார். அப்போது 2 வாலிபர்கள் வீட்டின் முன்பு செட்டில் இருந்த விவசாய பொருட்கள் மற்றும் ஜாக்கி ஆகியவற்றை திருடிகொண்டு இருந்தனர். இதை பார்த்து பழனிச்சாமி திருடன் என கூச்சலிட்டார். சத்தம் கேட்டு அருகில் இருந்தவர்கள் ஓடி வந்தனர். அவர்களை கண்டதும் 2 பேர் தப்பியோடினர். பொதுமக்கள் துரத்திச்சென்று ஒருவரை மடக்கி பிடித்தனர். மற்றொருவர் தப்பியோடிவிட்டார். இதையடுத்து பிடிபட்ட வாலிபரை அரூர் போலீசில் ஒப்படைத்தனர். வழக்குப்பதிவு செய்த போலீசார் நடத்திய விசாரணையில், அவர் கொய்யப்பட்டியை சேர்ந்த லவ்வாய்பியர்(28) என்பதும், தப்பியோடியவர் அதேபகுதியை சேர்ந்த பிரபு (32) என்பதும் தெரியவந்தது. லவ்வாய்பியரை கைது செய்த போலீசார், தப்பியோடிய பிரபுவை தேடி வருகின்றனர்.
விவசாய பொருட்கள் திருடிய வாலிபர் கைது
previous post