ராஜபாளையம், ஆக.2: இந்திய விவசாய தொழிலாளர்கள் சங்கத்தின் 13வது மாநில மாநாடு ராஜபாளையத்தில் நடைபெற்றது. இதில் மாநிலத் தலைவராக முன்னாள் எம்.எல்.ஏ பெரியசாமி, பொதுச் செயலாளராக பாஸ்கர், பொருளாளராக சந்திரகுமார், துணைத் தலைவர்களாக எம்.எல்.ஏ மாரிமுத்து, முன்னாள் எம்எல்ஏ பத்மாவதி, வரதராஜன், மாநில செயலாளர்களாக பழனிச்சாமி, பிரதாபன், மகேந்திரன் மற்றும் நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டனர். அதன்பின் ராஜபாளையம் திருவில்லிபுத்தூர் சாலையி கோரிக்கை விளக்க பொதுமாநாடு நடைபெற்றது.
முன்னாள் எம்எல்ஏ ராமசாமி தலைமை வகித்தார். இந்திய விவசாய தொழிலாளர்கள் சங்க தேசிய பொதுச்செயலாளர் குல்சார்சிங் கொரியா மற்றும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் முத்தரசன் முன்னிலை வகித்தனர். மாநாட்டில், விவசாய தொழிலாளர்களுக்கு தனி நல வாரியம் அமைக்க வேண்டும். உட்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட விவசாயிகள் பங்கேற்ற மாநாட்டில் எம்பிக்கள் சுப்பராயன், செல்வராஜ், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநில துணைச் செயலாளர் வீரபாண்டியன், எம்எல்ஏக்கள் ராமச்சந்திரன், மாரிமுத்து, முன்னாள் எம்பிக்கள் லிங்கம், அழகிரிசாமி, முன்னாள் எம்எல்ஏ பொன்னுபாண்டியன் உள்ளிட்டோர் பேசினர். திமுக சார்பில் ராஜபாளையம் சட்டமன்ற உறுப்பினர் தங்கபாண்டியன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.