கிருஷ்ணகிரி, ஆக.21: கிருஷ்ணகிரி அடுத்த குருபரப்பள்ளி அருகே விவசாயியை கத்தியால் குத்திய தொழிலாளியை போலீசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர். கிருஷ்ணகிரி அடுத்த குருபரப்பள்ளி பி.திப்பனப்பள்ளியை சேர்ந்தவர் மகேந்திரன் (43). கூலித் தொழிலாளி. இவர் பி.திப்பனப்பள்ளி ஏரிக்கரை அருகே கடந்த 18ம் தேதி மாலை ஆடுகளை மேய்த்துக் கொண்டிருந்தார். அப்போது ஜிஞ்சுப்பள்ளியை சேர்ந்த பரத்குமார் (39) என்ற விவசாயி, வேகமாக டூவீலரில் வந்துள்ளார். எதற்காக வேகமாக செல்கிறாய் என மகேந்திரன் கேட்டுள்ளார். இதனால் அவர்கள் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதில் ஆத்திரமடைந்த மகேந்திரன், கத்தியால் பரத்குமாரை குத்தி, கொலை மிரட்டல் விடுத்துள்ளார். இதில் காயமடைந்த பரத்குமார் சிகிச்சைக்காக கிருஷ்ணகிரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவர் கொடுத்த புகாரின் பேரில் குருபரப்பள்ளி போலீசார் வழக்குப்பதிவு செய்து, மகேந்திரனை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
விவசாயியை கத்தியால் குத்திய தொழிலாளி
previous post