திருத்துறைப்பூண்டி, செப். 1: திருவாரூர் மாவட்டம், திருத்துறைப்பூண்டி மனவளக்கலை அறக்கட்டளையை சேர்ந்த, ஆதிரெங்கம் தவம் மையத்தில் மனைவி நல வேட்பு நாள் விழா நடைபெற்றது.
விழாவுக்கு செல்வகுமார் வரவேற்றார். பேராசிரியர் மைக்கேல் மேரி தம்பதிக்கு காந்த பரிமாற்ற தவம் நடத்தியதோடு, மனைவிக்கு விழா எடுக்கும் பெருமை மனவளக்கலையில் மட்டுமே உள்ளது என்றும், தவம், உடற்பயிற்சி ஆகியவற்றின் முக்கியத்துவத்தை எடுத்துக் கூறினார். இவ்விழாவில் பாலு, இளங்கோ, அருளானந்தம் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். டிவில் எழிலரசன் நன்றி கூறினார்.