சிவகங்கை, ஜூன் 30: சிவகங்கையில் தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில் ஒன்றிய அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. விவசாயத்துக்கு பயன்படுத்தக்கூடிய தண்ணீருக்கு ஒன்றிய அரசு சார்பில் வரி விதித்ததை கண்டித்தும் இச்சட்டத்தை திரும்ப பெற வலியுறுத்தியும் இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
மாவட்டத் தலைவர் ஆறுமுகம் தலைமை வகித்தார். மாவட்ட செயலாளர் வீரபாண்டி, மாவட்ட பொருளாளர் விசுவநாதன், அழகர்சாமி போராட்டத்தை விளக்கி பேசினர். நிர்வாகிகள் திருநாவுக்கரசு, ஈஸ்வரன், உலகநாதன், மணியம்மா, மாவட்ட பொருளாளர் முத்துக்கருப்பன், மாதவன், வேங்கையா, முத்துராமலிங்க பூபதி, முருகானந்தம் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.