தர்மபுரி, ஜூலை 23: தர்மபுரி மாவட்ட விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம், வரும் 26ம் தேதி நடக்கிறது இதுகுறித்து கலெக்டர் சாந்தி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:தர்மபுரி மாவட்ட விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம், வரும் 26ம் தேதி(புதன்கிழமை) முற்பகல் 11 மணிக்கு, கலெக்டர் தலைமையில் நடைபெற உள்ளது. எனவே, தர்மபுரி மாவட்டத்தைச் சேர்ந்த விவசாயிகள் இதில் கலந்து கொண்டு, வேளாண்மை தொடர்பான தங்களது குறைகள் மற்றும் கருத்துகளை மனுக்கள் மூலம் தெரிவித்து பயனடையலாம்.