ஈரோடு,ஜூன்20: ஈரோடு கோட்டத்துக்கு உள்பட்ட ஈரோடு, பெருந்துறை, மொடக்குறிச்சி, கொடுமுடி வட்டங்களுக்கு வரும் 24ம் தேதி விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெறவுள்ளது.
ஈரோடு வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் 24ம்தேதி காலை 11 மணிகு நடைபெறும் இக்கூட்டத்தில், விவசாயிகள் தங்கள் நிலங்களை அளவைத் துறை மூலமாக அளவீடு செய்தல், விவசாய நிலங்கள், வழித்தடங்கள், ஓடைகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றுதல் போன்ற கோரிக்கைகளை மனுக்கள் மூலமாக தெரிவித்து நிவர்த்தி பெறலாம் என வருவாய் கோட்டாட்சியர் ரவி தெரிவித்துள்ளார்.