தேன்கனிக்கோட்டை, ஆக. 21: தளி அருகே உள்ள கும்ளாபுரம் கிராமத்தில், விவசாயிகளுக்கு ஒருங்கிணைந்த ஊட்டச்சத்து மேலாண்மை பயிற்சி நடைபெற்றது. தளி வட்டார வேளாண்மை துறை சார்பில், மாநில விரிவாக்க உறுதுணை சீரமைப்புத் திட்டத்தின் கீழ், 2024- 25ம் ஆண்டிற்கான கும்ளாபுரம் கிராமத்தில் பயறு வகை பயிர்களில் ஒருங்கிணைந்த ஊட்டச்சத்து மேலாண்மை பற்றி விவசாயிகளுக்கு உள் மாவட்ட அளவிலான ஒருநாள் பயிற்சி நடத்தப்பட்டது. அத்திமுகம் அதியமான் வேளாண் கல்லூரி பேராசிரியர் லட்சுமணகுமார் கலந்து கொண்டு ஒருங்கிணைந்த ஊட்டச்சத்து மேலாண்மை முக்கியத்துவம், மண்வளத்தை பாதுகாக்க இயற்கை உரங்கள் இடுவது குறித்தும், பஞ்ச காவ்யா தயார் செய்யும் முறைகள் குறித்தும், பண்ணை பொருட்கள், மகசூல் பெருக்கம், உரச் செலவுகளை குறைப்பது பற்றி விவசாயிகளுக்கு விளக்கினார். முகாமில் உதவி வோளண்மை அலுவலர் கண்ணன் தசரூபன், அட்மா உதவி தொழில்நுட்ப மேலாளர் சிந்தனா மற்றும் உதவி தொழில்நுட்ப மேலாளர்கள் கலந்துகொண்டனர்.
விவசாயிகளுக்கு பயிற்சி
previous post