மானாமதுரை, ஆக.12: மானாமதுரை வட்டாரம் மேலநெட்டூர் கிராமத்தில் தமிழ்நாடு பாசன வேளாண்மை நவீனமயமாக்கல் திட்டம் பகுதி 4 கீழ் வைகை உபவடி நிலப்பகுதித் திட்டத்தின் மூலம் விதைக்கிராம புத்தூட்ட விவசாயிகள் பயிற்சி முகாம் நடந்தது. இப்பயிற்சிக்கு வேளாண்மை உதவி இயக்குநர் ரவிசங்கர் தலைமை வகித்து பயிற்சி துவக்கி வைத்தார். மேலநெட்டூர் ஊராட்சி மன்ற தலைவர் சங்கீதா ராஜ்குமார் முன்னிலை வகித்தார். இப்பயிற்சியில் பயறு விதை கிராமக்குழுவிற்கு உளுந்து சாகுபடி செய்வது, விதைப்பண்ணை அமைப்பது பற்றி பயிற்சி வழங்கப்பட்டது.
முகாமில் சிவகங்கை விதைச்சான்று உதவி இயக்குநர் அலுவலக வேளாண் அலுவலர் சரஸ்வதி, விதைக்கிராம குழுவிற்கு நெல்லுக்கு பின் உளுந்து விதைப்பண்ணை அமைத்து சக விவசாயிகளுக்கு வழங்கவும், விதைப்பண்ணை அமைப்பது எப்படி என்றும் விவசாயிகள் வயலில் கடைபிடிக்க வேண்டிய தொழில்நுட்பங்கள் பற்றி எடுத்து கூறினார். மானாமதுரை துணை வேளாண் அலுவலர் சப்பாணிமுத்து, உதவி வேளாண்மை அலுவலர் சுமதி முகாமிற்கான ஏற்பாடுகளை செய்திருந்தனர். குழுவின் தலைவர்.நிதியரசன் நன்றி கூறினார்.