காரைக்குடி, நவ.29:காரைக்குடி அருகே நாகவயல் கிராமத்தில் கல்லல் வட்டார வேளாண்மைத்துறை அட்மா மாநில விரிவாக்க சீரமைப்பு திட்டத்தின் கீழ் சன்ன ரக நெல்பயிரில் ஒருங்கிணைந்த முறையில் பண்ணைப்பள்ளி பயிற்சி முகாம் நடந்தது. வேளாண்மை உதவி இயக்குநர் அழகுராஜா தலைமை வகித்து பேசுகையில், பூச்சிகொல்லி மருத்துகளை விவசாயிகள் அதிகம் தெளிக்க கூடாது. இதனால் நன்மை செய்யும் பூச்சிகளான குளவி, தட்டான், பொறிவண்டு, சிலந்தி பூச்சிகள் பாதிக்கப்படும்.
அதேபோல் நன்மை செய்யும் பூச்சிகளை இனம் காணவும், இந்த பயிற்சி உதவியாக இருக்கும். தீமை செய்யும் பூச்சிகளால் பொருளாதார சேத நிலை அதிகமாக இருக்கும் போது மட்டும் ரசாயன பூச்சி கொல்லிகளை தெளிக்க வேண்டும் என்றார். துணை வேளாண்மை அலுவலர் சேகர், உதவி வேளாண்மை அலுவலர் சோபனா, வட்டார தொழில்நுட்ப மேலாளர் அன்பழகன், உதவி தொழில்நுட்ப மேலாளர் தமிழரசி உள்பட பலர் கலந்து கொண்டனர்.