கூடலூர், ஆக.6: பாஜ மாநில குழு உறுப்பினர் சந்திரன் தமிழ்நாடு வேளாண்மை துறை இயக்குனருக்கு அளித்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது:
12,13 மற்றும் 14வது தவணையில் பல விவசாயிகளின் வங்கிக் கணக்கில் பிஎம் கிஷான் கௌரவ நிதி செலுத்தப்படாமல் உள்ளது. இது தொடர்பாக விவசாயத் துறையிலும், வங்கிகளிலும் விவசாயிகள் அணுகும் போது முறையான வழிகாட்டுதல்கள் கிடைப்பது இல்லை. தோட்டக்கலை துறை அலுவலகத்தில் விவசாயிகளின் அனைத்து ஆவணங்களும் சரிபார்க்கப்பட்டு, தகுதியுள்ள விவசாயிகளுக்கு பரிந்துரை செய்யப்பட்டும் பல ஏழை எளிய விவசாயிகளின் வங்கி கணக்கில் பணம் செலுத்தப்படாமல் உள்ளது. இதனால், உரிய பயனாளிகள் பாதிப்படைவதோடு, ஒன்றிய அரசுக்கும் அவப்பெயர் ஏற்படுகிறது. எனவே, இந்த திட்டத்தில் எந்த அலுவலகத்தில் எந்த பிரிவில் குளறுபடி நடைபெறுகிறது என்பதை கண்டறிந்து, அதனை நிவர்த்தி செய்ய தனி அலுவலரை நியமிக்க வேண்டும். இவ்வாறு மனுவில் கூறி உள்ளார்.