தஞ்சாவூர், செப். 7: மகளிர் உரிமைத்தொகைபெற தபால் அலுவலகத்தில் புதிய வங்கிக் கணக்கு தொடங்க சிறப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து தஞ்சாவூர் முதுநிலை அஞ்சல் கண்காணிப்பாளர் தங்கமணி வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியதாவது: தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து தபால் நிலையங்களிலும் உரிமைத்தொகை பெறும் பயனாளிகள் ஆதாருடன் இணைக்கப்பட்ட வங்கி கணக்கு தொடங்க சிறப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. மகளிர் உரிமைத்தொகை பெறுவதற்கு ஆதார் என்னுடன் இணைக்கப்பட்டுள்ள வங்கி கணக்கு அவரியம் தேவை. அஞ்சல் துறையின் கீழ் செயல்படும் இந்தியா போஸ்ட் பேமெண்டஸ் வங்கியில் கணக்கு துவங்கும் போது சம்பந்தப்பட்டவரின் ஆதார் என் RGE உடன் இணைக்கப்பட்டுவிடும். ஆகையால் இத்தொகை எந்த விதமான தடையின்றி கிடைக்கும். இதன் மூலம் அரசின் அனைத்து விதமான மானியங்களையும் இவ்வங்கி கணக்கிலே பெற்றுக் கொள்ளலாம்.
ஆதாருடன் இணைக்கப்பட்ட வங்கி சுனக்கு தொடங்க அதிகப்படியாக ஒரு நிமிடம் நான் ஆகும். இந்தியாபோஸ்ட் பேமெண்ட்ஸ் வங்கியில் தொடங்கப்படும் அனைத்து கணகளுகளுக்கும் க்யூ ஆர் கார்டு வழங்கப்படும். வாடிக்கையாளர்கள் தங்கள் ஆதார் கைரேகையை பயன்படுத்தி பணம் எடுக்கமுடியம். மேலும் கணக்கில் உள்ள கைப்பேசி எண் ஓடிபி மூலம் கணக்கில் இருந்து எளிய முறையில் பணம் போடவும் எடுக்கவும் முடியும்.
இந்த வங்கி கணக்குத்தொடங்கி கலைஞர் மகவிர உரிமைத்தொகை பெறும் பயனாளிகள் பயன்பெறலாம். தற்காக தஞ்சை மாவட்டத்தில் உள்ள அனைத்து தபால் நிலையங்களிலும் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளள. எனவே அருகில் உள்ள அஞ்சலகங்கள், தபால்காரர், கிராம அஞ்சல் ஊழியரை அணுகி மாநில அரசின் கலைஞர் மகளிர் உரிமைத்தொகை பெற ஆதார் உடன் இணைக்கப்பட்ட வங்கி கணக்கு தொடங்கி பயன்பெறலாம். மேலும் விவரங்களுக்கு 9840120161 < tel:9840120161 > என்ற தொலைபேசி எண் மற்றும் Whatsapp சேவை என் 8904803642 < tel:8904803642 > தொடர்பு கொண்டு பயன்பெறலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.