விழுப்புரம், ஆக. 17: தெற்கு ரயில்வேயின் திருச்சி கோட்ட மக்கள் தொடர்பு அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்திருப்பது, தெற்கு ரயில்வே கோட்டத்துக்குற்பட்ட பகுதிகளில் தண்டவாள பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதன் காரணமாக விழுப்புரத்திலிருந்து மயிலாடுதுறை வரை இயக்கப்படும் பயணிகள்யில் குறிப்பிட்ட நாள்களில் பகுதியளவில் ரத்து செய்யப்பட்டுள்ளது. விழுப்புரத்திலிருந்து காலை 6 மணிக்கு புறப்படும் விழுப்புரம் -மயிலாடுதுறை பயணிகள் ரயில் (வ. எண். 06689), ஆகஸ்ட் 19, 22 மற்றும் 29 ஆகிய தேதிகளில் கடலூர் துறைமுகம் சந்திப்பு முதல் மயிலாடுதுறை வரை பகுதியளவில் ரத்து செய்யப்பட்டுள்ளது. இதனால் இந்த ரயில் விழுப்புரம் சந்திப்பு ரயில் நிலையத்திலிருந்து கடலூர் துறைமுகம் சந்திப்பு வரை மட்டுமே இயக்கப்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
விழுப்புரம் – மயிலாடுதுறை பயணிகள் ரயில் பகுதியளவில் ரத்து
previous post