விழுப்புரம், ஆக. 27: விழுப்புரம் தி சென்னை சில்க்ஸ் மற்றும் ஸ்ரீ குமரன் தங்கமாளிகை 11ம் ஆண்டு துவக்க விழாவையொட்டி பட்டுப் புடவைகள், தங்க நகை வைரம், வெள்ளி விற்பனை சிறப்பு சலுகை, பரிசுகளும் அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் சென்னை உள்ளிட்ட முக்கிய நகரங்களில் துவங்கப்பட்ட சென்னை சில்க்ஸ் மற்றும் ஸ்ரீ குமரன் தங்க மாளிகை இதே நாளில் விழுப்புரத்தில் கடந்த 11 ஆண்டுகளுக்கு முன்பு துவங்கப்பட்டது.
புதிய பேருந்து நிலையம் அருகே மிகவும் பிரமாண்டமாக தொடங்கப்பட்ட தி சென்னை சில்க்ஸ் மற்றும் ஸ்ரீ குமரன் தங்க மாளிகை 11ம் ஆண்டு துவக்க விழா கொண்டாட்டம் இன்று நடைபெறுகிறது. இதனையொட்டி சென்னை சில்க்ஸ், ஸ்ரீகுமரன் தங்க மாளிகை சார்பில் புதுச்சேரி அரவிந்த் கண் மருத்துவமனை உடன் இணைந்து இலவச கண் மருத்துவ முகாம் வாடிக்கையாளர்கள் ஊழியர்கள் பயன்பெறும் வகையில் இன்று காலை 9 மணி அளவில் நடைபெறுகிறது. மருத்துவ முகாமில் பொதுமக்கள், ஊழியர்கள் கலந்து கொண்டு பயன்பெறலாம்.
மேலும் சென்னை சில்க்ஸ், குமரன் தங்கமாளிகை 11ம் ஆண்டு துவக்க விழா கொண்டாட்டத்தையொட்டி பல்வேறு சிறப்பு சலுகைகளும் அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி பட்டுப் புடவைகள் குறைந்த விலைக்கு விற்பனை செய்யப்பட்டு வருகின்றன. இரண்டு சில்க் ஆர்ட் ரூ.1,000, ரூ.1500, ரூ.1,800 இரண்டு பட்டு புடவை ரூ.2,000, ரூ.2,500, ரூ.4,000, ரூ.5000 என்று குறைந்த விலைக்கு விற்பனை செய்யப்பட்டு வருகின்றன. மேலும் ஸ்ரீ குமரன் தங்க மாளிகையில் தங்கம் வாங்கும் அனைத்து வாடிக்கையாளர்களுக்கும் நிச்சய பரிசும் வழங்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.