விழுப்புரம், ஜூலை 3: விழுப்புரம் முதியவர் வீட்டில் ரூ.1 லட்சம் நகை, பணத்தை திருடி சென்ற மர்ம நபர் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். விழுப்புரம் வழுதரெட்டியை சேர்ந்தவர் பூசமணி(64). இவர் நேற்று முன்தினம் வழக்கம்போல் வீட்டை பூட்டிக் கொண்டு தூங்கிக்கொண்டிருந்தார். அப்போது வீட்டு ஹால் மேஜை மீது தனது பையை வைத்துவிட்டு தூங்கியுள்ளாராம். காலையில் எழுந்து பார்த்தபோது இந்த பை திருடு போயிருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தார். யாரோ மர்ம நபர் ஒருவர் வீட்டு ஜன்னல் வழியாக நைசாக கையை விட்டு இந்த பையை திருடி சென்றது தெரிய வந்தது. இதில் 3 பவுன் நகை, ரூ.2000 பணம் இருந்துள்ளதாக பூசமணி விழுப்புரம் தாலுகா காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் வழக்கு பதிவு செய்த போலீசார் மர்மநபர் யார் என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதன் மொத்த மதிப்பு ரூ.1 லட்சம் ஆகும்.
விழுப்புரத்தில் முதியவர் வீட்டில் ரூ.1 லட்சம் நகை, பணம் திருட்டு
0
previous post