Monday, March 4, 2024
Home » விழுப்புரத்தில் பரபரப்பு பிறந்தநாள் விழாவில் ரவுடிகள் இடையே மோதல் கத்தியால் குத்தி கொல்ல முயற்சி தம்பதி கைது

விழுப்புரத்தில் பரபரப்பு பிறந்தநாள் விழாவில் ரவுடிகள் இடையே மோதல் கத்தியால் குத்தி கொல்ல முயற்சி தம்பதி கைது

by Karthik Yash

விழுப்புரம், ஜன. 6: விழுப்புரத்தில் பிறந்தநாள் விழாவில் வாலிபர்களை கொலை செய்ய முயன்ற தம்பதியை போலீசார் கைது செய்தனர். விழுப்புரம் ஊரல்கரைமேடை சேர்ந்தவர் நவீன்(22). ரவுடியான இவர் மீது கொலை, கொலைமுயற்சி உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளது. இந்நிலையில் நவீன் தனது பிறந்தநாளையொட்டி நேற்றுமுன்தினம் இரவு வாலிபால் கிரவுண்டு அருகே நண்பர்களுடன் பிறந்தநாள் கேக் வெட்டி கொண்டாடியுள்ளார். அப்போது அருகில் வீட்டிலிருந்த ஊரல்கரைமேடு பகுதியை சேர்ந்த ரவுடி கிஷோர், அவரது பெற்றோர் தோமாஸ், பிரேமா ஆகியோர் ஏன் இங்குவந்து கும்பலாக சத்தம் போடுகிறீர்கள் என்று கூறி தகராறு செய்துள்ளனர்.

மேலும் ஆத்திரமடைந்த மூன்றுபேரும் சேர்ந்து நவீன், அவரது நண்பர் நித்திஷ் ஆகியோரை கத்தியால் குத்தி கொலைசெய்ய முயன்றுள்ளனர். இதில் ரத்தவெள்ளத்தில் காயமடைந்த இருவரும் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுகுறித்து நித்திஷ் அளித்த புகாரின்பேரில் நகர போலீசார் கிஷோர் உள்ளிட்டவர்கள் மீது கொலை முயற்சி வழக்கு பதிவு செய்து தோமாஸ், பிரேமா ஆகியோரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் கிஷோரை தேடி வருகின்றனர்.

You may also like

Leave a Comment

1 × 5 =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2023 – Designed and Developed by Sortd.Mobi