விழுப்புரம், மார்ச் 6: தனியார் நிறுவன ஊழியர் வீட்டில், பீரோவை உடைத்து 8 பவுன் நகையை திருடி சென்ற மர்ம நபர்களை ேபாலீசார் தேடி வருகின்றனர். விழுப்புரம் வழுதரெட்டியை சேர்ந்தவர் ஜேம்ஸ். இவர் சென்னையில் தனியார் நிறுவனம் ஒன்றில் பணியாற்றி வருகிறார். வாரந்தோறும் வீட்டிற்கு வந்து செல்வாராம். அதன்படி கடந்த 3ம் தேதி வீட்டை பூட்டிக்கொண்டு ெசன்றவர் நேற்று மீண்டும் வீட்டிற்கு வந்துள்ளார். அப்போது வீட்டிற்குள் சென்று பார்த்தபோது, பீரோ உடைக்கப்பட்டு அதில் இருந்த 8 பவுன் நகை திருடு போயிருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தார். இது குறித்து விழுப்புரம் தாலுகா காவல் நிலையத்தில் புகார் செய்தார். புகாரின்பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர். ஜேம்ஸ் வீட்டின் சாவியை முன்புறம் வைத்து சென்றதை நோட்டமிட்ட மர்ம நபர்கள், சாவியை எடுத்து கதவை திறந்து பீரோவை உடைத்து இந்த திருட்டு சம்பவத்தில் ஈடுபட்டிருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கின்றனர். இது குறித்து போலீசார் வழக்கு பதிந்து நகையை திருடி சென்ற மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.
விழுப்புரத்தில் தனியார் நிறுவன ஊழியர் வீட்டில் 8 பவுன் நகை திருட்டு
0