வருசநாடு, ஜூன் 27: கடமலைக்குண்டு தனியார் மெட்ரிக் பள்ளி சார்பில் போதை பொருள் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. இதில் போதையால் சீரழியும் இளைஞர்கள், மாணவர்கள் வாழ்க்கை பற்றி மிகவும் தெளிவாக காவல்துறை சார்பில் எடுத்துரைக்கப்பட்டது. கல்லூரி மாணவர்கள் பள்ளி மாணவர்கள் வெற்றிப்பாதையில் எவ்வாறு செயல்பட வேண்டும் உள்ளிட்ட கருத்துரைகள் எடுத்துரைக்கப்பட்டது. இதில் கடமலைக்குண்டு இன்ஸ்பெக்டர் செல்வகுமாரி, எஸ்ஐக்கள் பிரேம்ஆனந்த் ,அம்மாவாசை, ராமசாமி, பன்னீர்செல்வம், பாண்டியம்மாள் மற்றும் எஸ்பி தனிப்பிரிவு போலீசார், அரசு பள்ளி ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.