திருப்புத்தூர், மார்ச் 13: திருப்புத்தூர் அருகே பூலாங்குறிச்சியில் உள்ள வ.செ.சிவ அரசு கலைக் கல்லூரி மாணவர்கள் நேற்று வாக்களிப்பதின் முக்கியத்துவம் குறித்து விழிப்புணர்வு பேரணி மேற்கொண்டனர். கல்லூரி நாட்டு நலப்பணி திட்டத்தின் சார்பாக கல்லூரி முதல்வர் ஆனந்தி (பொ) தலைமையில் பேரணி துவங்கியது. பேரணி கல்லூரியிலிருந்து நகரின் முக்கிய வீதிகளின் வழியாக சென்று பேருந்து நிறுத்தத்தை அடைந்தது. மாணவர்கள் வாக்களிப்பதின் முக்கியத்துவம் குறித்து கையில் பதாகைகள் ஏந்தியும், கோஷங்கள் எழுப்பியும் பொதுமக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தினர். இந்நிகழ்ச்சியில் கல்லூரி பேராசிரியர்கள், மாணவ மாணவியர்கள் பங்கேற்றனர்.
விழிப்புணர்வு பேரணி
0
previous post