கோபி,ஜூன்2: கோபி ஏரிஸ் நகர் அமலாபள்ளி அருகில் உள்ள டர்ப் 36 மைதானத்தில் பிகில் பால் விளையாட்டு அரங்கத்தின் திறப்பு விழா நடைபெற்றது. கோபி நகர இளைஞரணி செயலாளர் விஜய் கருப்புசாமி அரங்கத்தை திறந்து வைத்தார்.ஸ்ரீ சாய் சிந்து செவிலியர் கல்லூரியின் துணைத் தலைவர் டாக்டர். கிஷோர் ரவிச்சந்திரன் குத்துவிளக்கு ஏற்றி துவங்கி வைத்தார்.இந்த மைதானத்தில் ஏற்கனவே கிரிக்கெட் மற்றும் கால்பந்து போட்டிகளுக்கு பயிற்சி போட்டிகள் நடைபெற்று வருகிறது.
தற்போது புதிய முயற்சியாக பிக்கில் பால் மைதானம் திறக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் தற்போது பிரபலமாகி வரும் இவ்விளையாட்டை ஒலிம்பிக்கில் இணைப்பது குறித்து பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாகவும், வரும் நாட்களில் பிக்கில் பால் விளையாட்டுக்கான பல்வேறு பயிற்சி முகாம்கள் நடத்தப்பட உள்ளதாக டர்ப் 36 நிறுவனத்தினர் தெரிவித்தனர்.விழாவில்தவெக ஈரோடுமேற்கு மாவட்டசெயலாளர் பிரதீப் குமார்,நகர செயலாளர் ஜம்பு கார்த்திக் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.