ஆண்டிபட்டி, ஜூலை 31: ஆண்டிபட்டி அருகே உள்ள முத்துசங்கிலிப்பட்டியைச் சேர்ந்தவர்கள் அய்யனார்-கற்பகவள்ளி தம்பதி. இவர்களின் 14 வயதான மூத்த மகள், 10ம் வகுப்பு படித்து வருகிறார். கடந்த சில நாட்களுக்கு முன்பு ரூபிகா பள்ளியில் இருந்து விட்டிற்கு நடந்து வந்து கொண்டிருந்தார். அப்போது, அங்கிருந்து ஒப்பந்த பணி விளம்பர சுவர் திடீரென இடிந்து ரூபிகாவின் கால்களில் விழுந்தது.
அக்கம்பக்கத்தினர் மாணவியை மீட்டு தேனி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு மாணவியின் கால்களை பரிசோதித்த டாக்டர் காலில் எலும்பு முறிவு ஏற்பட்டதாக கூறினர். அங்கு சிகிச்சைக்கு பின் மாணவி வீட்டிற்கு அனுப்பப்பட்டார். தங்கள் மகளுக்கு உரிய சிகிச்சை அளித்து, நிவாரணம் வழங்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என பெற்றோர் மாவட்ட கலெக்டர், அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.