திருத்துறைப்பூண்டி, அக். 6: விளக்குடி அரசு பள்ளியில் மெல்ல கற்கும் மாணவர்கள் கண்டறிந்து அளிக்கப்பட்டு வரும் சிறப்பு பயிற்சியை திருவாரூர் மாவட்டக் கல்வி அலுவலர் மாதவன் ஆய்வு செய்தார். திருத்துறைப்பூண்டி ஒன்றியம் விளக்குடி அரசு மேல்நிலைப் பள்ளியில் சுற்றுப்புறம், குடிநீர் வசதி, கழிப்பறை வசதி, வகுப்பறை தூய்மை ஆகியவற்றை திருவாரூர் மாவட்டக் கல்வி அலுவலர் மாதவன் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
மேலும் பள்ளியில் மெல்ல கற்கும் மாணவர்களை கண்டறிந்து சிறப்பு பயிற்சி அளிக்கப்படுவதை பார்வையிட்டு ஆலோசனை வழங்கினார். மாணவர்களிடம் தமிழ், ஆங்கிலம் எழுத படிக்கவும், கணித அடிப்படைத் திறன்களிலும் கேள்வி கேட்டு மேலும் மேம்படுத்துவதற்கான ஆலோசனைகளை மாணவர்களுக்கும், ஆசிரியர்களுக்கும் மாவட்ட கல்வி அலுவலர் மாதவன் வழங்கினார். அப்போது மாவட்ட ஆய்வாளர் ரமேஷ்குமார், தலைமை ஆசிரியை தமிழ்ச்செல்வி மற்றும் ஆசிரியர்கள் உடனிருந்தனர்.