விருத்தாசலம், மே 28: விருத்தாசலம் அடுத்த கருவேப்பிலங்குறிச்சி அருகே உள்ள மருங்கூரை சேர்ந்தவர் சிகாமணி மகன் பெரியசாமி (23). இவருக்கும், அதே பகுதியைச் சேர்ந்த வீரகாந்தன் (43), லதா, வாசுகி ஆகியோருக்கும் இடையே இடப்பிரச்னை சம்பந்தமாக முன்விரோதம் இருந்து வந்துள்ளது. இந்நிலையில் சம்பவத்தன்று மீண்டும் அவர்களுக்குள் பிரச்னை ஏற்பட்டுள்ளது.
அப்போது பெரியசாமியையும், பெரியசாமியின் சகோதரி விஜய ராணியின் கணவர் கவிமணி ஆகிய இருவரையும் வீரகாந்தன், லதா, வாசுகி ஆகிய மூன்று பேரும் சேர்ந்து அசிங்கமாக திட்டி தாக்கி கொலை மிரட்டல் விடுத்துள்ளனர். இதுகுறித்த புகாரின்பேரில் கருவேப்பிலங்குறிச்சி போலீசார், வீரகாந்தன், லதா, வாசுகி ஆகிய மூவர் மீதும் வழக்கு பதிவு செய்து வீரகாந்தனை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.