விருதுநகர், செப்.1: விருதுநகர் அருகில் ஆர்.ஆர்.நகர் தூய வேளாங்கண்ணி ஆலய 48வது ஆண்டு திருவிழா நேற்று முன்தினம் இரவு கொடியேற்றத்துடன் துவங்கியது. மதுரை மாவட்ட பல்சமய பணிக்குழு மாநில செயலாளர் பெனடிக்ட் பர்னபாஸ், ஆர்.ஆர்.நகர் பங்குத்தந்தை பீட்டர் ராய், உதவி பங்குத் தந்தை சாமிநாதன், இறைமக்கள் முன்னிலையில் தூய வேளாங்கண்ணி அன்னையின் உருவம் பொறித்த கொடியை ஏற்றி வைத்து தொடங்கி வைத்தார்.
திருவிழாவை முன்னிட்டு தினசரி நவநாள் திருப்பலி நடைபெறுகிறது. வரும் செப்.8 இரவு 7 மணியளவில் தூய வேளாங்கண்ணி ஆரோக்கிய அன்னையின் உருவம் அலங்கரிக்கப்பட்ட தேர்பவனியும், அதை தொடர்ந்து திருவிழா திருப்பலி நடைபெற உள்ளது. செப்.9 அதிகாலை கொடியிறக்கம் செய்யப்பட்டு விழா நிறைவடையும். இதற்கான ஏற்பாடுகளை பங்குத்தந்தை பீட்டர் ராய், உதவி பங்குத்தந்தை சாமிநாதன் தலைமையில் இறை மக்கள் செய்து வருகின்றனர்.