விருதுநகர், ஜூலை 28: கலைஞர் நூற்றாண்டு உயர்சிறப்பு மருத்துவமனைக்கு திறன் மேம்பாட்டு நிரந்தர செவிலியர் பணியிடங்களை சரண்டர் செய்யும் நடவடிக்கையை கைவிடக்கோரி விருதுநகரில் செவிலியர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர். விருதுநகர் கலெக்டர் அலுவலகத்தில் தமிழ்நாடு அரசு அனைத்து செவிலியர் சங்கத்தினர் நேற்று ஆர்ப்பாட்டம் நடத்தினர். சங்க மாவட்ட பொறுப்பாளர் உமாதேவி தலைமை வகிக்க, அரசு ஊழியர் சங்க மாவட்ட தலைவர் சிவஞானம் முன்னிலை வகித்தார்.
ஆர்ப்பாட்டத்தில் கலைஞர் நூற்றாண்டு உயர்சிறப்பு மருத்துவமனைக்கு திறன் மேம்பாட்டு நிரந்தர செவிலியர் பணியிடங்களை சரண்டர் செய்யும் நடவடிக்கையை கைவிட வேண்டும். அதற்கு பதிலாக புதிய நிரந்த பணியிடங்களை உருவாக்கி அவற்றில் ஒப்பந்த செவிலியர்கள் பணி நிரந்தர செய்ய வேண்டுமென்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர்.