நாகர்கோவில், ஜூலை 5: கன்னியாகுமரி நாடாளுமன்ற உறுப்பினர் விஜய் வசந்த் மற்றும் விளவங்கோடு சட்டமன்ற உறுப்பினர் தாரகை கத்பர்ட் ஆகியோர் விரிகோடு ஊர் பொதுமக்களுடன் வந்து ரயில்வே மேம்பாலம் குறித்து கலெக்டர் அழகுமீனாவை, நேற்று மாலை சந்தித்து பேசினர். அப்போது விரிகோட்டில் பாலம் அமையும் பகுதியில் பொதுமக்கள் மற்றும் பாலம் அமைய நிலம் கொடுத்தவர்கள், வீடுகளை இழப்பவர்களுடன் கலந்துரையாடி அவர்களுக்கு எந்த விதமான ஆட்சேபனையும் இல்லாத வகையில், மக்கள் விரும்பும் இடத்தில் பாலம் அமைக்க வேண்டும் என வலியுறுத்தினர். பின்னர் இது குறித்து விஜய் வசந்த் எம்பி கூறுகையில், வரும் திங்கட்கிழமை விரிகோடு பகுதியில் எம்.எல்.ஏ முன்னிலையில் ஊர் பொதுமக்களை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தி இறுதி முடிவு எடுக்கப்படும் என தெரிவித்தார்.
விரிகோடு ரயில்வே கிராசிங்கில் மக்கள் விரும்பும் இடத்தில் மேம்பாலம் அமைக்க வேண்டும் கலெக்டரிடம் எம்.பி., எம்.எல்.ஏ. கோரிக்கை
0