விராலிமலை, ஜூலை 4: விராலிமலை மத்திய ஒன்றிய திமுக சார்பில் விராலிமலை ரத்னா கார்டன் குடியிருப்பு பகுதிகளுக்கு நேற்று வீடு வீடாக சென்று புதிய உறுப்பினர்களை மத்திய ஒன்றிய செயலாளர் அய்யப்பன் தலைமையில் புதிய உறுப்பினர்களை இணைத்தனர்
திராவிட முன்னேற்றக் கழக அரசின் திட்டங்களையும் சாதனைகளையும் எடுத்துரைத்து 2026ம் ஆண்டு சட்டப்பேரவை தேர்தலுக்கான பிரச்சாரத்தை மேற்கொள்ளும் விதமாக ஓரணியில் தமிழ்நாடு என்ற பிரச்சார இயக்கத்தை நடத்துமாறு தமிழக முதலமைச்சரும் திமுக தலைவருமான மு.க. ஸ்டாலின் நிர்வாகிகளுக்கு அறிவுறுத்தி இருந்தார்
அந்த வகையில், விராலிமலை மத்திய ஒன்றிய திமுக செயலாளர் அய்யப்பன் தலைமையில் திமுக நிர்வாகிகள் நேற்று பெரியார் நினைவு சமத்துவபுரம், ரத்னா கார்டன் உள்ளிட்ட குடியிருப்பு பகுதிகளுக்கு நேரடியாக சென்று தமிழக அரசின் திட்டங்களை எடுத்துக் கூறினார் தொடர்ந்து குடியிருப்பு வாசிகளிடம் தமிழக அரசு செயல்படுத்தி வரும் திட்டங்களினால் அவர்கள் அடைந்து வரும் பயன்களை கேட்டு அறிந்தனர் அதனைத் தொடர்ந்து திமுகவில் தங்களை புதிய உறுப்பினர்களாக இணைத்து கொள்கிறீர்களா என்று கேட்டு அவர்களிடம் முழு சம்மதம் பெற்ற பின்னர் அவர்களை புதிய உறுப்பினர்களாக சேர்த்து வருகின்றனர்.