விராலிமலை, ஜூன் 16: சென்னையில் வழக்கறிஞர் வெட்டி கொலை செய்யப்பட்டதை கண்டித்தும், படுகொலை செய்தவர்களை உடனடியாக கைது செய்ய வலியுறுத்தியும் விராலிமலை, இலுப்பூர் வழக்கறிஞர்கள் ஒரு நாள் நீதிமன்றம் புறக்கணிப்பில் சனிக்கிழமை ஈடுபட்டனர்.
சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கறிஞராக பணியாற்றி வந்த வழக்கறிஞர் கௌதம் என்பவர், கடந்த ஜூன் 11 மர்ம கும்பலால் சரமாரியாக வெட்டிக் கொலை செய்யப்பட்டார். இச்சம்பவம் குறித்து திருவான்மியூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.இந்நிலையில், வழக்கறிஞரைக் கொலை செய்த கும்பலை கைது செய்ய வலியுறுத்தி விராலிமலை, இலுப்பூர் நீதிமன்ற வழக்கறிஞர்கள் ஒருநாள் நீதிமன்றம் தொடர்பான பணிகளில் ஈடுபடாமல் புறக்கணிப்பு செய்தனர்.